82 வயது ஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் 25 வயது தொலைக்காட்சி வர்ணனையாளரை திருமணம் செய்துள்ள நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 57 வயது வித்தியாசமுள்ள இந்த மணமக்களை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் லக்னர் என்ற கோடீஸ்வரருக்கு 82 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே நான்கு பெண்களை திருமணம் செய்து நான்கு பெண்களையும் விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனி தொலைக்காட்சியில் பணிபுரியும் 25 வயது வர்ணனையாளரை காதலித்து ஐந்தாவது திருமணம் செய்துள்ளார். 57 வயது வித்தியாசம் இருந்தாலும், ரிச்சர்ட் லக்னர் அவர்களின் அன்புக்கு தான் கட்டுப்பட்டதாக தொலைக்காட்சி வர்ணனையாளர் கேத்தி சிட்ஸ்மிட்ஸ் கூறியுள்ளார். இவர் தொலைக்காட்சியில் பணிபுரிவதோடு பிளேபாய் புத்தகத்திற்க்காக மாடலிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்ட், ‘பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள். திருமணம் அதைவிட ஆபத்தானது. இருப்பினும் நான் இளம்பெண்களுடன் கடைசி வரை போராட விரும்புகிறேன்’ என்ரு கூறியுள்ளார்.
25 வயதான கேத்தி, ஆடம்பரமான வாழ்க்கைக்காகவே தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகமான ஒருவரை மணந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.