ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல். அதிமுக கோரிக்கையை நிராகரித்த தேர்தல் அதிகாரிகள்

srirangam pollவரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட 34 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் தாக்கல் செய்திருந்த 46 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க சார்பில் வளர்மதி, தி.மு.க சார்பில் ஆனந்த், பா.ஜ.க சார்பில் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணாதுரை என நான்கு முனைப்போட்டி நிலவும் ஸ்ரீரங்கத்தில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யபட்டது.

இதில் 12 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என அதிமுக வேட்பாளர் வளர்மதி தேர்தல் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஆனால் அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த அதிகாரிகள் சுப்பிரமணியம் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டனர்.

அதிமுக தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியதாகவும், ஆனால் கடைசியில் நீதி வென்றுவிட்டதாகவும் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் கூறினார்.

Leave a Reply