இந்தியாவின் தலை நகரான புதுதில்லியில் இருக்கும் Pearl Academy-ல் நடப்பு கல்வியாண்டில் நடைபெறும் ஆடை விற்பனை பிரிவிற்கான எம்.ஏ படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க்லாம்.
படிப்பின் பெயர்: Master of Arts (MA Fashion Marketing)
தகுதி: Fashion Management, Marketing, Retail, Merchanding, Manufacturing ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிசைன் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்புடன் பேஷன் இன்டஸ்ட்ரி-ல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, குழுகலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நுழைவுத்தேர்வு ஜூன் 16ம் தேதி நடைபெறுகிறது. www.pearlacademy.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை கிரிடிட்/டெபிட் கார்டு பயன்படுத்தி அல்லது டிடியாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.