கடந்த 21ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ நேற்று தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருடைய உடல் தேறி வருவதாகவும், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.,
பத்திரிகையாளர் சோ சளித்தொல்லை காரணமாக கடந்த சில நாட்களாக மூச்சுவிட திணறி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவருடைய உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் நேற்று பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.