ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஏற்கனவே இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் தரோது அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அவர்களும் இறுதிபோட்டியில் தகுதி பெற்றுள்ளார். இதனால் இறுதிப்போட்டி பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவாவுடன் மோதும் போட்டியை காண ரசிகர்கள் போட்டி போட்டிக்கொண்டு டிக்கெட் வாங்கிச்செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று மெல்போர்ன் மைதானத்தில் இருவரும் மோதவுள்ளனர். ஏற்கனவே இருவரும் பலமுறை இறுதிப்போட்டியில் மோதியுள்ளனர். ஆனால் செரீனா வில்லியம்ஸ் மட்டுமே அதிகமுறை வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு ஷரபோவா செரீனாவை வீழ்த்தினார். அதன்பின்னர் 11 வருடங்களாக ஷரபோவா செரீனாவை ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.