திரிபுரா மாநிலத்தில் பத்து வயது மகளை உயிருடன் புதைக்க முயன்ற கொடூரமான தந்தை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள புட்டியா என்ற கிராமத்தில் வசித்து வரும் அபுல் ஹுசைன் என்பவர் தனது 10 வயது மகளை உயிருடன் புதைக்க முயன்றுள்ளார். மகளின் கைகளை கயிற்றால் கட்டி குழிதோண்டு மார்பு வரை புதைத்துவிட்டு பின்னர் தலைமேல் ஒரு கூடையை வைத்து மூடியுள்ளார்.
10 வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் வந்து பார்த்தபோது கூடையால் மூடப்பட்டிருந்த சிறுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் அபுல் ஹுசைன் இந்த கொடிய வேலையை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அபுல் ஹுசைன் தன்னுடைய 8வயது மகன் மீது மிகவும் பிரியமாகவும், மகள் மீது கோபமாக இருந்து வந்தார் என்றும், அவருக்கு பெண் குழந்தை என்றாலே பிடிக்காது என்றும் அக்கம் பக்கத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது அபுல் ஹுசைன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.