முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸில் இருந்து விலகப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட ஜெயந்தி நடராஜன், கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜி.கே.வாசனின் ஆதரவாளராக அவர் இருந்ததால், அவரை கட்சியின் மேலிடம் ஒதுக்கியே வைத்திருந்தது.
இந்நிலையில் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் பாஜக அல்லது தாமகவில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ஜெயந்தி நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்று இன்று முன்னணி பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில் அவர் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக செயல்படும்படி தன்னை ராகுல்காந்தி நிர்ப்பந்தித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.