டூரிங் டாக்கீஸ். திரைவிமர்சனம்

touring talkies
எஸ்.ஏ.சந்திரசேகர் பல புரட்சிகரமான கருத்துக்களை தனது படங்களில் கூறினாலும், அந்த கருத்தை கூறி முடிப்பதற்குள் அதைவிட பல மடங்கு ஆபாசமான, அருவருப்பான, வன்முறைக்காட்சிகளையும் கூறுவார். அதன்பின்னர் கடைசியாக ஒரு புரட்சிக்கருத்தை கூறி படத்தை முடிப்பார். இதுதான் அவருடைய பாணி. ‘டூரிங் டாக்கீஸ் படத்தில் வரும் இரண்டு கதையிலும் அதே பாணியைத்தான் சொல்லி முடித்துள்ளார். பல இடங்களில் அருவருப்பான காட்சிகள், நெளிய வைக்கும் வசனங்கள், இந்த வயதில் உங்களுக்கு தேவையா எஸ்.ஏ.சி சார்?

தனது இளமைக்கால காதலியை 75வயது வயதில் தேடும் எஸ்.ஏ.சி, படத்தில் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் அளவுக்கு அதிகமாகவே நடித்துள்ளார். பாமக கட்சி இந்த படத்தை எதிர்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இளமைக்கால எஸ்.ஏ.சியாக வரும் அபிசரவணன், மற்றும் அவருக்கு ஜோடியாக வரும் பாப்ரிகோஷம் நடிப்பில் சுத்தமாக ஒரு ஈடுபாடு இல்லை. பொம்மை போல வருகின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்யாணத்திற்கு முன்பே உறவு கொள்வது, காதலியுடன் தண்ணி அடிப்பது போன்ற சம்பவங்கள் எந்த ஊரில் நடந்தது என்பது எஸ்.ஏ.சிக்கு மட்டுமே வெளிச்சம். அவர்களுடைய காதல் காட்சியிலும் அழுத்தம் இல்லை. பிரிவதற்கும் பொருத்தமான காரணத்தை அவர் சொல்லவில்லை. ஏனோ தானோ என்று எடுத்திருக்கின்றார்.

அடுத்த கதையில் ரோபோ சங்கர், சாய்கோபி, ஜெயபாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த கதையில் ஜாதி பிரச்சனையை கையில் எடுத்திருக்கின்றார். 5 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது, அதற்காக அந்த சிறுமியின் தாயார் அவர்களை பழிவாங்குவது போன்ற காட்சிகளை எல்லாம் அருவருப்பின் உச்சக்கட்டம். மதுவில் சிறுநீர் கலப்பது, மதுவுக்கு சைடீஷ்ஷாக மலத்தை கொடுப்பது, பிறப்புறுப்பில் தேளை விடுவது இதுபோன்ற கேவலமான சிந்தனைகள் சத்தியமாக வேறு யாருக்கும் தோன்றாது என்பது மட்டும் உறுதி.

இந்த படத்துடன் நான் இயக்குவதை நிறுத்திவிடுவேன் என்று எஸ்.ஏ.சி கூறியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை விட இந்த ஒரு வசனம்தான் மனதிற்கு நிம்மதியை தருகிறது. இளையராஜாவின் இசை விழலுக்கு இறைத்த நீர்.

மொத்தத்தில் டூரிங் டாக்கீஸ் குடும்பத்துடன் பார்க்க தகுதியற்ற படம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1CjpoFX” standard=”http://www.youtube.com/v/nj14-54hLQU?fs=1″ vars=”ytid=nj14-54hLQU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4300″ /]

Leave a Reply