கைமாறியது ஸ்பைஸ் ஜெட் உரிமை. கலாநிதி மாறன் ராஜினாமா.

SpiceJetகடும் நெருக்கடியில் சிக்கியிருப்பதாலும், தொலைத்தொடர்பு ஊழல் குற்றச்சாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும், மாறன் சகோதர்கள் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் உரிமையை அதன் முன்னாள் இயக்குனர் அஜய் சிங் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நேற்றிரவு நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கைமாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பைஸ் ஜெட் உரிமை மாற்றப்பட்டதை அடுத்து அதன் நிர்வாகக்குழு உப்பினர்கள் பொறுப்பில் இருந்து கலாநிதி மாறன், காவேரி மாறன், எஸ்.நடராஜன் ஆகியோர்கள் உடனடியாக ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸை மீட்க அஜய்சிங் ரூ.1500 கோடி புதியதாக முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜய்சிங் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply