முத்தரப்பு கிரிக்கெட் போட்டி. ஆஸ்திரேலியா சாம்பியன்

cricketஇந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான் பின்ச் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 17.4 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த நிலையில் மாக்ஸ்வெல் மற்றும் மார்ஷ் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். மாக்ஸ்வெல் 95 ரன்களும், மார்ஷ் 60 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 278 ரன்கள் எடுத்தது.

279 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 39.1 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

மாக்ஸ்வெல் ஆட்டநாயகனாகவும், ஸ்டார்க் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply