தனுஷ் தந்தைக்கு பிடிவாரண்ட். சென்னை நீதிமன்றம் உத்தரவு.

dhanushசென்னை செள்கார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா அவர்களிடம் இருந்து பிரபல சினிமா இயக்குனரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கடந்த 2012–ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனுக்காக கஸ்தூரி ராஜா கொடுத்த இரண்டு காசோலைகளும் வங்கியில் போதுமான பணமின்றி திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பைனாசியர் முகுன்சந்த் போத்திரா, சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜ் அவர்கள் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்த மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் இந்த வழக்கை மீண்டும் வரும் 13–ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

கஸ்தூரிராஜாவுக்கு எதிராக பிறப்பித்த இந்த உத்தரவு கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply