பேசும் வசதியுடன் வாட்ஸ் அப். இந்தியாவில் முதன்முதலில் அறிமுகம்

whatsappமிகக்குறுகிய காலத்தில் உலகில் மிக வேகமாகபரவிய ஒரு ஆப்ஸ் என்றால் அது வாட்ஸ் அப்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் வளர்ச்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஃபேஸ்புக் நிறுவனர் பல மில்லியன் டாலர் கொடுத்து இதனை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாறிக்கொள்ள மட்டும் உதவி வந்த வாட்ஸ் அப் மூலம் இனி பேசவும் செய்யலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் முதன்முதலில் இந்தியாவில் இந்த சேவைக்கான சோதனையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வாட்ஸ் அப்பில் பேசும் வசதியை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்து, தற்போது அதனை சோதனை முறையில் தற்போது வெளியிட்டுள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் இதனைப்  பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப் இதை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply