ஆந்திர மாநில பெண் எம்.பிக்கு பன்றிக்காய்ச்சல். தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு

geethaராஜஸ்தான் முன்னாள் முதல்வருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் வந்ததாக நேற்று வந்த செய்தியை அடுத்து ஆந்திர மாநில பெண் எம்.பிக்கு ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதித்துள்ளதாக இன்று திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில் அம்மாநிலங்களில் சாதாரண குடிமக்கள் மட்டுமின்றி மக்களவை எம்.பியும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில அராகு மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கீதா என்பவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக கீதா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் அவருக்கு நேற்று ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டன. இந்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்யப்படுவதாக மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ஜெ.சரோஜினி தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறினார். தற்போது அவர் உடல்நலன் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply