மனிதவள மேலாண்மை துறையில், முதுநிலை டிப்ளமோ படிப்பை(PGDHRM) மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை, ஐ.ஐ.எம் – ராஞ்சி வரவேற்கிறது.
வருகிற ஜுன் மாதம் இப்படிப்பு தொடங்கப்படவுள்ளது. PGDHRM படிப்பை வழங்கும் ஒரே ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனமாக திகழ்கிறது இக்கல்வி நிறுவனம். தேசிய மனிதவள மேம்பாட்டு நெட்வொர்க்(NHRDN) உள்ளிட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடி, இப்படிப்பிற்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை, இளநிலைப் படிப்பில் பெற்றிருக்க வேண்டும். SC/ST/DA/PWD பிரிவினருக்கு 45% இருந்தால் போதும்.
இப்படிப்பில் சேர விரும்புவோர், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசித்தேதி – பிப்ரவரி 7.
விரிவான தகவல்களுக்கு http://www.iimranchi.ac.in/