பசலை கீரையில் பருப்பு கூட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
பசலை கீரை- 3 கோப்பை அளவு,
துவரம்பருப்பு- 200 கிராம்,
சிறிய வெங்காயம்- 4,
பச்சை மிளகாய்- 3,
தக்காளி- 2,
பூண்டு- சிறிதளவு,
உப்பு, சமையல் எண்ணெய்-தேவையான அளவு,
கடுகு, உளுந்தம்பருப்பு- 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை, புளி- சிறிதளவு,
தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
செய்முறை:-
• கீரையை சுத்தம் செய்துகொள்ளவும்.
• அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பருப்பை வேகவிட வேண்டும். பருப்பு வெந்ததும் கீரையை அதில் போட்டு நன்றாக வேக விட வேண்டும்.
• அம்மியில் சிறிய வெங்காயம், மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக எடுக்கவும்.
• தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
• கீரை, பருப்பு கலவையில் அரைத்த விழுதை போட வேண்டும்.
• உப்பு சேர்த்து, நறுக்கிய தக்காளி, பூண்டு ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.
• ஒரு கொதி நிலையை அடைந்ததும் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.
• இப்போது பசலை கீரை பருப்பு கூட்டு தயார் ஆகிவிடும்.