மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்துவேறுபாடா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்.

dhanush and aiswaryaகோலிவுட் நடிகராக மட்டும் இருந்த தனுஷ் தற்போது ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் அகில இந்திய நடிகராக புரமோஷன் ஆகிவிட்டார். தனுஷ் நடித்த ஷமிதாப் மற்றும் அனேகன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒருவார இடைவெளியில் வெளிவரவுள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியுடன் தனுஷ் இருக்கும் நிலையில் திடீரென அவருக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் பிரிய உள்ளதாகவும் வதந்திகள் பரவி உள்ளன.

மிக வேகமாக பரவி வரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த தனுஷ் இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில்,  “என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா, அது மட்டுமின்றி வீட்டில் என் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்து கொள்கிறார்.

ஐஸ்வர்யா, எனது குழந்தைகள் சகோதரர், தந்தை உள்ளிட்டோருடன் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிசியாக நடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது.

தொழில் ரீதியாக என்னால் அடிக்கடி வீட்டில் இருக்க முடியாது. அப்போது ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்கிறார். இதைவிட நான் என்ன எதிர்பார்க்க முடியும்.

ஐஸ்வர்யா துணிச்சலான பெண். அதோடு அழகான நல்ல தாயாகவும் இருக்கிறார். என் தாயிடமும் பாராட்டு பெற்றுள்ளார். எனது மூத்த மகனுக்கு எட்டு வயது. இளைய மகனுக்கு ஆறு வயது ஆகிறது. அவர்கள் என்னை மாதிரி இருக்கிறார்கள்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.

Leave a Reply