எகிப்து நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முகம்மது முர்சி பதவியில் இருந்து இறக்கப்பட்டதை எதிர்த்து அவரது கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் கலவரமாக மாறி பயங்கர வன்முறை நிகழ்ந்தது. இந்த கலவரத்தில் கெய்ரோ அருகேயுள்ள கெர்தசா என்ற இடத்தில் இருந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த 13 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 188 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் மரணம் அடைந்துவிட்டதாகவும், இருவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டதாலும் மீதி 184 பேர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் மீதியிருந்த 183 பேர்களுக்கு தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் இவர்களது தூக்கு தண்டனை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. 183 பேர்களும் ஒரே நாளில் தூக்கிலிடப்படுவார்களா? அல்லது படிப்படியாக தூக்கிலிடப்படுவார்களா? என்பது குறித்த விவாதத்தில் எகிப்து ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன.