தைப்பூசவிழா திருக்கல்யாணம் :பச்சைக்கிளி எப்படி வந்தது ?

முருகன்_வீதி_உலா

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

ஜன.,28ல் துவங்கிய பழநி தைப்பூசவிழா பிப்.,6வரை நடக்கிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று பெரியநாயகியம்மன் கோயில் மேற்கு வெளிப் பிரகாரத்தில் அலங்கரிக்க பட்ட மணப்பந்தலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

விநாயகர் பூஜையுடன், கலசங்கள் வைத்து சிறப்பு ஹோம பூஜை நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க இரவு 8.15மணிக்கு மாங்கல்ய தாரணமும், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின் இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் சுவாமி உலா வந்தார். கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 25 பவுன் திருமாங்கல்யம் உபயம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் .அப்போது முருகனை சுற்றிய பல வகை கிளிகள் முருகனின் அ௫கில் சென்று இசை கானம் செய்தது.

lord_muruga_tiruttani

தேரோட்டம்: இன்று தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் நான்கு ரத வீதிகளில் மாலை 4.45 மணிக்குமேல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. காவடியுடன், அலகு குத்தி வந்த ஏராளமான பக்தர்கள் கிரிவீதியில் குவிந்துள்ளனர்.

Leave a Reply