ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பான் பணயக்கைதிகள் இருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பொதுமக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது ஜோர்டான் நாட்டை சேர்ந்த ஒருவரை உயிருடன் எரித்து கொலை செய்து அந்த வீடியோவையும் இணையத்தில் திவீரவாதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவினால் உலகத்தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஜோர்டான் நாட்டு பைலட் ஒருவரை இரும்புக்கூண்டில் ஒன்றில் அடைத்து வைத்து அவர் மீது பெட்ரோல் வைத்து தீவைத்து கொளுத்தியுள்ளனர். மிகவும் கொடூரமாக துடிதுடிக்க பலியான இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து நேற்று தீவிரவாதிகள் தங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஜோர்டான் அரசின் செய்தித்தொடர்பாளர் முகம்மது அலி மொமெனி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஐ.எஸ்.ஐ.ஐ தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட F-16 என்ற விமானம் எதிர்பாராதவிதமாக தீவிரவாதிகளின் இருப்பிடம் அருகே தரையிறங்கியதால் அதில் இருந்த பைலட் Maaz al-Kassasbeh என்பவர் தீவிரவாதிகளிடம் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்டான் பைலட்டின் படுகொலைக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.