என்னென்ன தேவை?
மைதா – 2 கப்,
பனீர் – 1 கப்,
முந்திரிப் பருப்பு – 2 டீஸ்பூன்,
ஈஸ்ட் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
டால்டா – 1/2 கப்,
பால் – 1/2 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு, கொத்தமல்லி – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வெதுவெதுப்பான பாலில் உப்பு, சர்க்கரை, டால்டா, ஈஸ்ட் சேர்த்து 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். மைதா மாவை சலித்து அதில் பால் கலவையைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். பனீரை சீவி, அதில் உப்பு, கொத்தமல்லி, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கலவை செய்து கொள்ளவும். மாவு நன்கு ஊறியதும் உருண்டைகளை உருட்டி அதன் நடுவில் 2 டீஸ்பூன் கலவை வீதம் வைத்து சப்பாத்தி வடிவத்தில் தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லைக் காய வைத்து நாண் ரொட்டியைப் போட்டு, மறு பக்கத்தில் தண்ணீர் தெளித்து, அடுப்பு தணலில் சுட்டெடுத்து 2 பக்கமும் வெண்ணெய் தடவி பரிமாறவும்.