சிம்புவுடன் மீண்டும் நெருக்கமா? கோலிவுட்டில் பரபரப்பு.

simbu and nayanசிம்பு நடித்து இயக்கிய வல்லவன்’ படத்தின் இடையே சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதும், அதன்பின்னர் அந்த காதல் சில மாதங்களில் பிரேக் அப் ஆனதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத நிலையில் சமீபத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

ஆரம்பத்தில் சிம்புவின் கதாநாயகி என்ற எல்லையை தாண்டாமல் ஒரு கேப்பில் இருந்த நயன்தாரா, ஹன்சிகா-சிம்பு மோதலுக்கு பின்னர் சிம்புவிடம் நட்புமுறையில் பழக ஆரம்பித்ததாக செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில் நேற்று சிம்பு தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது திரையுலக நண்பர்களுக்காக  அவர் பிரத்யேக இரவு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சிம்புவுக்காக நயன் சென்னை வந்து இரவு பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நட்பின் அடிப்படையில்தான் சிம்புவின் பார்ட்டிக்கு வந்ததாகவும், வேறெந்த நோக்கமும் இல்லை என்று அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும், இருவரும் மீண்டும் நெருங்கி வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Reply