வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

jyothi வடலூர்: வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி… என, மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள், ஜோதி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 144வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடந்தது. மாதம் தோறும் பூச நட்சத்திரத்தில், அரை திரையில் ஜோதி தரிசனம் காட்டப்படும். தை மாதம் நடைபெறும் ஜோதி தரிசனம், ஏழு முழு திரை நீக்கி காட்டப்படுவது தனி சிறப்பு. நேற்று காலை, 6:00 மணிக்கு, முதல் கால ஜோதி தரிசனம் நடந்தது.

TN_39540_124541118பின், 10:00, மதியம், 1:00, இரவு 7:00, 10:00 மற்றும் இன்று காலை, 5:30 மணி என, ஆறு காலங்களில், கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன் நிறம், வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை, மகா மந்திரம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை காலை வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் செல்லப்படும். வள்ளலார் சித்தி பெற்ற அறை திறக்கப்பட்டு, மதியம், 12:00 முதல் மாலை, 6:00 மணி வரை, திரு அறை தரிசனம் நடைபெறும்.

Leave a Reply