சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு இன்று இந்த அதிரடி முடிவை எடுத்தது.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மாதங் சிங் கைது நடவடிக்கையை தடுக்க முயற்சி மேற்கொண்டதாக அனில் கோஸ்வாமி சர்ச்சையில் சிக்கினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அனில் கோஸ்வாமி உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமையன்று சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாதங் சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டதாக இவர் பெயர் சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் பகுதியிலிருந்து முதல் முறையாக முக்கியப் பொறுப்பு வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் கோஸ்வாமி என்பது குறிப்பிடத்தக்கது.