நயன்தாராவின் ‘மாயா’ உரிமையை பெற்ற ராம.நாராயணனின் மகன்.

nayan
யாமிருக்க பயமே, அரண்மனை, பிசாசு, டார்லிங் ஆகிய பேய்ப்படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக கோலிவுட்டில் தற்போது பல இயக்குனர்களை பேய் ஆட்டிவைக்கின்றது. அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய ‘மாயா’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.கோலிவுட்டில் ஸ்டார் நடிகைகள் பேயாக நடிக்க தயங்குவதுண்டு. ஆனால் ஹன்சிகா பேயாக நடித்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது பேய் கேரக்டரில் நடிக்க பெரிய நடிகைகள் விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த ஹீரோ ஆரியுடன் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே, அந்த பேய் கேரக்டருக்காகத்தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘மாயா’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இதே நிறுவனம்தான் சமீபத்தில் வெளியாகி நல்ல கலெக்ஷனை கொடுத்த பிசாசு படத்தையும் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாராயணனின் மகன் முரளி இந்த படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளார். ஆடியன்ஸ் மத்தியில் தற்போது பேய்ப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாலும், நயன்தாராவுக்கும் கோலிவுட்டில் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், இந்த படம் தனக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் முரளி கூறியுள்ளார்.

Leave a Reply