கெஜ்ரிவாலை தேர்வு செய்தால் பாதியிலேயே ஓடிப்போய்விடுவார். கிரண்பேடி

delhi electionடெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான அனல்கக்கும் பிரச்சாரம் தற்போது அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நிர்வாகத்திறன் இல்லை என பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக 40 ஆண்டு கால நிர்வாகம் செய்த அனுபவம் எனக்கு உள்ளது ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் தனது ஐ.ஆர்.எஸ். வேலையை முழுமையாக செய்யயாமல் 5 ஆண்டுகள் மட்டுமே அதிகாரியாக இருந்தார். அதன்பின்னர் டெல்லி முதல்வராகி அந்த பதவியை ஒரு சில மாதங்களில் ராஜினாமா செய்தார். மீண்டும் நீங்கள் அவரை தேர்ந்தெடுத்தால் மறுபடியும் பாதிலேயே ஓடிப்போய்விடுவார். கேஜ்ரிவாலுக்கு நிர்வாகத்திறன் சுத்தமாக இல்லை. என்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன்” இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10-ம் தேதி நடைபெறுகிறது. பாரதிய ஜனதாகட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே இருமுனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. தொடர்ந்து 3 முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலிலும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் பரிதாபமான நிலையில் உள்ளது.

Leave a Reply