இந்திய கேப்டன் தோனிக்கு பெண் குழந்தை.

ms-dhonoi-sakshiஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. உலக் கோப்பை போட்டியில ஆடுவதற்காக நிறைமாத கர்ப்பிணி மனைவியை பிரிந்து  தோனி ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று அவரது மனைவி சாக்ஷி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

நிறைமாத கார்ப்பிணியான சாக்ஷி  டெல்லி அருகே கிர்கானில் உள்ள ஃபோரிஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 3.7 கிலோ இருந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

குழந்தை பிறந்தது  குறித்து தோனிக்கு தகவல் அளிக்கப்பட்டதும் அவர் சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். நிறைமாத கர்ப்பிணி மனைவியை விட்டு பிரிந்து டென்சனில் இருந்த அவர் தற்போது ரிலாக்சாக இருப்பதாக சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த உலகக்கோப்பைக்கு முன் சில நாட்களுக்கு முன்னர்தான் தோனிக்கு திருமணம் நடந்தது. சாக்ஷியை திருமணம் செய்த ராசியில்தான் தோனி கோப்பையை வென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் தோனிக்கு குழந்தை பிறந்த ராசி, மீண்டும் உலகக்கோப்பையை பெற்றுத்தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply