எகிப்து: கால்பந்து போட்டி மைதானத்தில் பயங்கர கலவரம். 22 பேர் பரிதாப பலி

football 4

எகிப்து நாட்டில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட வன்முறையில் 22 கால்பந்து ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான பலர் சிறுவர்கள் என்றும் மருத்துவமனையில் அவர்களின் தாய்மார்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது என்றும் எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று எகிப்து நாட்டில் ஜாம்லாக்  மற்றும் என்.பி.பி.பி.ஐ அணிகள் மோதிய ஆட்டம், விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இந்த மைதானத்தின் நுழைவு வாயிலில் டிக்கெட் இல்லாத ரசிகர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை அங்குநின்ற காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள் மைதானத்தில் வெளியே நின்றிருந்த கார்களுக்கு தீவைத்தனர். இதனால் போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் இடையே நடைபெற்ற இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவத்தையடுத்து, நேற்று கூடிய எகிப்து அமைச்சரவை, தேசிய லீக் கால்பந்து போட்டியை காலவரையற்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எகிப்து நாட்டில் கால்பந்து போட்டிகளின் போது வன்முறை வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி போர்ட் சையத் நகரில் நடந்த போட்டியில் அல்அலி மற்றும் அல் மஸ்ரி அணிகள் மோதின. இந்த போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 74 ரசிகர்கள் கொல்ப்பட்டனர்.

football 1 football 2 football 3  football 5 football

Leave a Reply