பெசண்ட் நகர் கடலில் ராட்சஷ அலை சிக்கிய 4 மாணவர்கள் மாயம்.

beachசென்னையில் கடலில் குளிக்கும்போது உயிரிழப்பவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடலின் ஆழத்தில் சென்று குளிப்பது ஆபத்து என்று ஆங்காங்கே விளம்பரப்படுத்தியும் இதுகுறித்து விழிப்புணர்வு இன்றி உயிரை இழக்கும் பரிதாபங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள பெசண்ட் நகர் கடலில் குளித்தவர்களில் 4 பேர் ராட்சத அலையில் சிக்கி நேற்று காணாமல் போய் உள்ளனர். நீரில் மூழ்கிய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் குளிக்க தனியார் எஞ்சினியரிங் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த 17 மாணவர்கள் கடலில் குளிக்க வந்தனர்.

கடல் அலையில் அவர்கள் உற்சாகமாக குளித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென எழும்பிய ராட்சத அலையில் 5 பேர் சிக்கினர். அவர்களில் இருவர் தட்டுத்தடுமாறி நீந்தி கரைக்கு வந்தனர். மூவர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களின் நிலை குறித்து, மீனவர்கள் உதவியோடு கடலோர காவல்படையினரும், காவல்துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோல், மெரினா கடலில் குளிக்கச்சென்ற பழனி என்பவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், எண்ணூர் கடல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவன் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளான்.

Leave a Reply