சென்னை மாநகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்த வி.ஐ.பிக்களின் பட்டியல் வெளியீடு.

chennai corporationகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரி செலுத்தாத சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டல்களில் திருநங்கைகளை ஆடவைத்து அதிரடியாக வரிவசூல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், தற்போது வரி செலுத்தாத வி.ஐ.பிக்களின் பெயர்களின் பட்டியலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இந்த பட்டியலில் முதலில் இடம் பிடித்து இருப்பவர் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசியா. இவருக்கு சொந்தமான ஓட்டல் தி.நகர் ஓட்டல் 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரத்து 19  ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பின்னர் ரூ.1 கோடி மட்டும் வரி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களின் பெயர்களும், கட்ட வேண்டிய தொகையும் வருமாறு:

‘கிவ்ராஜ் டெக் பார்க் பிரைவெட் லிமிடெட்’- ரூ.2,99,33679

ரமணி ஓட்டல் லிமிடெட்  ரூ.15,55,811

டிஎம்பி அன்வர் அலி – ரூ.98,94652

மீனம்பாக்கம், நியூ கார்கோ காம்பளக்ஸ் – ரூ.57,72,01,494

மயிலாப்பூர் சென்னை சிட்டி சென்டர் – ரூ.38,18149
 
சி.எஸ்.ஐ. டயோசீசன் ரூ.23,60492

தி.நகரில் உள்ள சைரன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலைப்பள்ளி ரூ.13,34,060

ஆயிரம் விளக்கில் உள்ள பார்க் ஓட்டல் லிமிடெட் ரூ.11,07,356

இந்த நிறுவனங்கள் உள்பட மொத்தம் 182 பேர் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் மொத்தம்  26 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரத்து 139 ரூபாய் வரி பாக்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply