ஆம் ஆத்மி – 64, பாஜக – 5, காங். – 0. தோல்விக்கு நானே பொறுப்பு. கிரண்பேடி

aap1`1“`டெல்லி தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு பாதகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் டெல்லி தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.

தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று காலை எண்ணத்தொடங்கியது முதல், முதல்கட்ட நிலவரத்திலே ஆம் ஆத்மி பெரும்பான்மையான தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது. அப்போது பா. ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் பேசியபோது, இது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான போட்டியே. இந்த போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் இடையேதான் போட்டி. நாங்கள் போட்டியில் கலந்துகொண்டோம். போட்டியில் இருவர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கூறியுள்ளார்.

தான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது நிறைய தோல்விகளை சந்தித்து உள்ளதாகவும், அதுபோன்றே இந்த தோல்வியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று குறியுள்ளார்.

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த நிலையில் இந்த தேர்தலில் ஒற்றை இலக்க எண்களில்தான் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதல பாதாளத்தில் உள்ளதால் ஆம் ஆத்மி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி தெரிவித்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 64 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 5 தொகுதிகளிலும், முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட முன்னணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply