‘அனேகன்’ ரிலீஸுக்கு திடீரென முளைத்த பிரச்சனை. படக்குழுவினர் அதிர்ச்சி.

angeganசமீப காலங்களில் ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ரிலீஸாகும் நேரத்தில் கதை திருட்டு அல்லது வேறு ஏதாவது பிரச்சனையை உருவாக்கி, அந்த படங்களுக்கு எதிராக வழக்கு பொடுவது மற்றும் போராட்டங்கள் நடத்துவது ஆகியவை வாடிக்கையாகி வருகிறது.  தற்போது இந்த நிலைமை தனுஷின் அனேகன் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 13ஆம்தேதி வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் னுஷ் நடித்த அனேகன்’ படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவு படுத்தும் காட்சி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்நிலையில் சமீபத்தில் திருக்குறிப்பு மகாசபையின் சங்க செயல் விளக்க கூட்டம் சமீபத்தில் உடன்குடி அருகே நடந்தது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதில் ஒரு தீர்மானமாக ”அனேகன்” படத்தில் இடம்பெற்றுள்ள சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நீக்காவிட்டால், அனேகன்’ படம் ஓடும் தியேட்டர்களை குடும்பத்துடன் முற்றுகையிடுவோம்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

தனுஷ், அம்ரியா, கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல்குல்கர்னி, தலைவாசல் விஜய், மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘அனேகன்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 13ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

Leave a Reply