சீனாவில் உள்ள நன்னிங் என்ற நகரத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40).
அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே சமயத்தில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட வித்தியாசமாக இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்த பன்றிக்குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண் உறுப்பும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். உடனடியாக அவரது பண்ணைக்கு வித்தியாசமான பன்றியை பார்க்க பொதுமக்கள் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிரபல ஊடகம் ஒன்று பன்றிக்குட்டியை புகைப்படங்கள் எடுத்து இதுகுறித்த கட்டுரை ஒன்றை எழுதியது. இதனால் பன்றிப்பண்ணையில் கூட்டம் கட்டுக்கடங்காது கூடியது. இந்த வித்தியாசமான பன்றிக்குட்டியை பெரும் விலை கொடுத்து வாங்க பலர் முன்வந்தனர்.
ஆனால் பேராசைப்பட்ட டாலு, இந்த பன்றிக்குட்டியை காட்சிப்பொருளாக வைத்து பெரும் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். ஆனால் இந்த வித்தியாசமான பன்றியை அதன் தாய்ப்பன்றி அருகே சேர்த்துக்கொள்ளவில்லை. பால் கொடுக்கவும் மறுத்துவிட்டது. இதனால் இந்த பன்றிக்குட்டி பரிதாபமாக சில நாட்களில் இறந்துபோனது. இறந்த இந்த பன்றிக்குட்டியை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.