அத்வானி இன்று சென்னை வருகை. பலத்த பாதுகாபு ஏற்பாடு.

advani_1நாளை கல்பாக்கத்துக்கு வருகை தரும் அத்வானிக்கு காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தை நாளை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வுக்காக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் எல்.கே.அத்வானி இன்று  விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று இரவு தங்கும் அவர் நாளை வியாழக்கிழமை கல்பாக்கம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய உள்ளார்.

அத்வானியின் பாதுகாப்பிற்காக 6 மாவட்ட போலீஸார் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் மாவட்ட கடல்கரையோர பகுதிகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 6 மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வெடி குண்டு சிறப்பு நிபுணர்கள் என 1,500 போலீஸார், இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply