தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சோலார் மின் உற்பத்தி.

solar2நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுவதால் நாடு முழுவதும் சோலாம் மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. முதல்கட்டமாக அரசு கட்டிடங்களில் சோலார் மின் உற்பத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் முதல் சோலார் மின் உற்பத்தி அரசு கட்டிடம் என்ற பெருமையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டிடம் பெருமை பெறும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் ரூ.90 லட்சம் மதிப்பில் சோலார் மின் உற்பத்திக்கான கருவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இந்த கட்டிடம் சோலார் மின் உற்பத்தியின் மூலம் இயங்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கட்டிடத்தில் தினமும் 100கே.வி மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த கட்டிடத்தை போன்ற இன்னும் பல அரசு கட்டிடங்களில் சோலார் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply