திருப்பதி கோவிலில் மாயமான ரூ.180 கோடி.தணிக்கையில் அதிர்ச்சி தகவல்

tirupathiதிருமலை திருப்பதி கோவில் தேவஸ்தான கணக்கில் இருந்து 180 கோடி ரூபாய் மாயமாகி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமின்றி பக்தர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி கோவிலின் வரும் வருமானத்தின் கணக்குகள் மாதம் ஒருமுறை தணிக்கை செய்யப்படுவது வழக்கம். ஆனால் திடீரென ஆந்திர அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தணிக்கை செய்தால் போதும் என்று உத்தரவிட்டுள்ளதால், கடந்த மூன்று மாதங்களுக்கு பின்னர் தற்போது கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி ஆந்திர அரசின் தணிக்கை துறை அதிகாரிகளும் அவ்வப்போது தணீக்கைசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய தணிக்கையில் ரூ.180 கோடி தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். அதே நேரம், இதற்கான ஆவணங்களும் மாயமாகி இருப்பது பெரும் மர்மமாக உள்ளது.

அதனால், தேவஸ்தான கணக்கு வழக்கில் மத்திய அரசின் தணிக்கை துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ஆந்திர அதிகாரிகள் மத்திய தணிக்கை துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இந்த தகவல் அதிகாரிகளின் மட்டத்தில் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விஷயத்தை ருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அந்த பணம் எப்படி மாயமானது என்பதை கண்டு பிடிக்க, அவர் தணிக்கையில் அனுபவம் வாய்ந்த நரசிம்மன், சரத்குமார் ஆகியோரை நியமனம் செய்துள்ளார்.

Leave a Reply