உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி தற்போது நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் குப்தில் 49 ரன்களும், மெக்கல்லம் 65 ரன்களும், வில்லியம்சன் 57 ரன்களும், ஆண்டர்சன் 75 ரன்களும் குவித்துள்ளனர். இலங்கை அணி தரப்பில் லக்மால், மெண்டிஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், குலசேகரா, ஹீரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
பின்னர் 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய இலங்கை அணி, 46.1 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் திரமன்னே 65 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்த போதிலும், அதன்பின்னர் விளிஅயாடிய தில்ஷன் 24 ரன்களும், சங்கரகரா 39 ரன்களும் எடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் மாத்யூஸ் 46 ரன்கள் எடுத்தர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணியின் ஆண்டர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.