1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்ததால் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியையும், 1995 ஆண்டு முதல் பிப்ரவரியில் 2 ரூபாய் நோட்டும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதுநாள் வரை ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தாள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வந்தன.
1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மதிப்பில் நாணயங்கள் மட்டுமே தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சமீப காலமாக நாணயங்களுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால்
மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டு வினியோகத்துக்கு விரைவில் வரவிருக்கின்றது. இந்த தகவல்களை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அச்சடிக்கும். 2011 நாணய சட்டப்படி இந்த நோட்டுகள் இருக்கும்.
நிதிதுறை செயலாளர் கையொப்பம் அதில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் புழக்கத்துக்கு வர இருக்கும் 1 ரூபாய் நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும்.