கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை தற்போது அதிகரித்திருப்பதால் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோ, டீசல் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 61 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலாகிறது என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணங்கள் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி இன்றுமுதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசா அதிகரிக்கப்பட்டு, ரூ.58.88-ல் இருந்து ரூ.59.85 ஆகிறது; டீசல் விலை லிட்டருக்கு 67 பைசா அதிகரிக்கப்பட்டு, ரூ.48.91-ல் இருந்து ரூ.49.58 ஆகிறது.