ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களின் தலையை வெட்டி கொலை செய்யும் வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று எகிப்து நாட்டை சேர்ந்த 21 கிறிஸ்துவர்களின் தலையை வெட்டியவீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் எகிப்து மட்டுமின்று உலக நாடுகள் அனைத்துமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
சிரியா நாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து உளவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 21 எகிப்தியர்களை நேற்று தலையை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி விடியோ ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படுபாதக செயலுக்கு எகிப்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு செயலாளர் பிலிப்ஸ் ஹாம்மோண்ட் அவர்கள் கூறியபோது இந்த பயங்கரவாத செயலை பிரிட்டன் கடுமையாக கண்டிக்கின்றது. காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை தீவிரவாதிகள் நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட 21 பேர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.