அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் பயங்கர நஷ்டம் அடைந்துவிட்டதாகவும், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட அதன் தயாரிப்பாளருக்கு உதவ தான் தயார் என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் தனது டுவிட்டர் கணக்கில் கூறியிருப்பதாவது, “என்னை அறிந்தால்’ திரைப்படம் மன நிலை பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்ற அனைவரும் வெறுக்கும் படமாக அமைத்துள்ளது. இந்த படத்தால் அதன் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட ‘என்னை அறிந்தால்’ இரண்டாம் பாகத்தில் நான் நடித்து தருகிறேன்’ என டுவீட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த டுவிட்டர் பக்கம் பவர்ஸ்டாரின் போலியான பக்கம் என்றும், இந்த பக்கத்தில் உள்ள டுவிட்டுகளை நம்ப வேண்டாம் என்றும் ஒரு தரப்பு கூறிவந்தபோதிலும் அஜீத் ரசிகர்களின் கடுமையான கோபத்திற்கு பவர்ஸ்டார் ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன