நம்மிடம் உள்ள சொத்துக்களை நமக்கு பிறகு யார் அனுபவிக்க வேண்டும் என உயில் எழுதி வைப்பதுபோல் இனி நம்முடைய பேஸ்புக் பக்கத்தையும் நாம் இறந்த பிறகு யார் உபயோகிக்க வேண்டும் என்பதையும் நாம்முடிவு செய்யலாம். இந்த புதிய வசதியை ஃபேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி முதல் பேஸ்புக் நிறுவனம் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தற்போது உயிருடன் இருக்கும் பேஸ்புக் பயனாளர் ஒருவர், தான் இறந்த பிறகு தன்னுடைய பக்கத்தை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் ஃபேஸ்புக் பயனாளீகள் தன்னுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யாரை வேண்டு மானாலும் சட்டப்பூர்வமான வாரிஸாக நியமனம் செய்யலாம். அவர் இறந்த பிறகு அவரால் நியமிக்கப்பட்ட பேஸ்புக் வாரிசு அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பார்.
பேஸ்புக் அறிமுகம் செய்திருக்கும் இந்த வசதிய டாக்டர் பட்டம் பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக கிளையில் கணினித் துறையில் ஜேட் ப்ருபேக்கர் என்பவர் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது வரை பேஸ்புக்கில் ஒரு வருக்குக் கணக்கு இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது தெரியாது. ஆனால் இனி வரும் காலங்களில் இறந்த போன ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் அவரின் பெயருக்கு முன்னால் ‘ரிமெம்பரிங்’ (நினைவில் உள்ள) எனும் வார்த்தை சேர்க்கப்பட உள்ளது. அதன் மூலம் பேஸ்புக் பயனாளர் ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். இது அனாவசி யமான குழப்பங்களைத் தவிர்க்கும்” என்றார்.