பிறக்கும்போதே இரட்டை கர்ப்பத்துடன் பிறந்த குழந்தை. சீன மருத்துவர்கள் அதிர்ச்சி.

babyசீனாவில் பிறந்த ஒரு குழந்தை பிறக்கும்போதே கர்ப்பமாக பிறந்ததாக வெளிவந்த ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவில் கடந்த வாரம் பிறந்த ஒரு குழந்தையின் வயிற்றில் கட்டி போல இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த கட்டி எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டுபிடிக்க ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அது இரட்டை குழந்தைகளின் கரு என்பது தெரியவந்தது. இதனால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தாயின் வயிற்றில் மூன்று குழந்தைகள் உருவாகியிருக்கலாம் என்றும், அதில் இரண்டு குழந்தைகள் ஒரு குழந்தையின் வயிற்றினுள் சென்றிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அகற்றப்பட்டது. இவ்வாறு பிறக்கும்போதே கர்ப்பமாக ஒரு குழந்தை பிறப்பது என்பது அரிதிலும் அரிதாக அதாவது,500,000 குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு பிறக்க வாய்ப்பு இருப்பதாக சீன மருத்துவர்கள் தெரிவித்தனர்.

baby in china

Leave a Reply