வாஷிங்டன் இந்து கோவில் சுவற்றில் விஷமத்தனம். இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு.

hindu templeஅமெரிக்காவின் முக்கிய நகரமான வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலின் சுவற்றில்  மர்ம நபர்கள் சிலர் விஷமத்தனமான வாசகங்களை எழுதியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றில் ஸ்வஸ்திக் முத்திரையை பதித்து அதற்கு கீழே ‘வெளியே போ’ என்ற வாசகம் எழுதியிருப்பதாகவும், இவை இனவெறியை தூண்டும் வகையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இந்த கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் நித்யா நிரஞ்ஜன் தெரிவித்தார்.

இந்துக்களை நாட்டைவிட்டு வெளியே போக மர்ம நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர் என்றும், இது போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடக்கக்கூடாது என்றும் இது குடியேறியவர்களுக்கான நாடு என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

இன்று இந்த கோவிலில் மகாசிவராத்திரி கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இனவெறியை ஏற்படுத்தும் விஷமத்தனமான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்க, இந்திய மக்கள் வழிபட்டு வரும் அந்தக் கோவிலில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply