90% ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் டேட்டிங் செல்கின்றனர். இது சாதாரண ஒருவர் கூறிய குற்றச்சாட்டு அல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டு. ஆம் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி அவர்கள் கூறிய இந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக பீகார் மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய முதல்வர் ராம் மஞ்சி, ‘பீகாரில் 90% ஆண்கள் அடுத்தவர்களின் மனைவிகளுடன் டேட்டிங் செல்வதாகவும், 2.5% ஆண்கள் மட்டுமே தங்களுடைய மனைவியுடன் டேட்டிங் செல்வதாகவும் கூறினார். பீகார் முதல்வராக பதவியில் நீடிப்பதே சந்தேகம் என்ற நிலையில் இருக்கும் முதல்வர் ராம் மஞ்சி சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர் தனது பேட்டியில் பதுக்கல் வியாபாரம் செய்யும் பணக்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.