என்ஐடி-ரூர்கேலாவில் எம்பிஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க பி.டெக்.,யில் ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
தேர்வு முறை:
இளங்கலை மதிப்பெண் – 100
தேசிய அளவில் தகுதித்தேர்வு – 100
குழுகலந்துரையாடல் -100
நேர்முகத்தேர்வு – 100
ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மார்ச் 10 ஆன்லைனின் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழுகலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு என்ஐடி இணையதளத்தை பார்க்கலாம்.