அண்ணாமலையார் கோவிலில்மஹாசிவராத்திரி லட்ச தீப விழா!

47459940

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு லட்ச தீப விழா சிறப்பாக நடந்தது.மஹா சிவராத்திரி முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

BY JAMES MANORAMA-785673அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை 108 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு மலர்களால் அண்ணாமலையாருக்கு லட்சார்ச்சனை செய்தனர். மாலை 6 மணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முதல் கருவறை வரை வண்ணங்களால் லிங்கபைரவி, இடைக்காட்டு சித்தர், அர்த்தநாரீஸ்வரர், சிவபெருமான் பார்வதி நடனம்,108 லிங்கங்கங்களால் அலங்கரிக்கப்பட்டும், ஓம் நமச்சிவாய உருவம் உள்ளவாறு ஓவியம் வரையப்பட்டு, அதை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்பட்டன.

47459947

மேலும் பிரம்ம தீர்த்தத்தை சுற்றி தீபம் ஏற்றியதும் தீப ஒளியில் கோவில் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது பக்தர்களை கவர்ந்தது.நள்ளிரவு 12 மணி அளவில், ஸ்வாமி கருவறையில் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு தாழம்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோ  வில் கலையரங்கத்தில், மாலை 6 மணி முதல் விடிய விடிய தேவார பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம், பக்தி பாடல்கள் பாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ராஜகோபுரம் எதிரில் காலை முதல் மாலை வரை இறைவனை போற்றி, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீப மேற்றி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.

Leave a Reply