தமிழகத்தில் திமுக, அதிமுகவை அடுத்து எங்கள் கட்சியே பெரிய கட்சியாக உள்ளது. மேலும் பாஜகவை விட நாங்களே பெரிய கட்சி என்பதால் எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைப்போம் என்று பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டஅன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி, “தமிழக அரசு சார்பில் கடந்த 65 ஆண்டுகளில் வாங்காத அளவுக்கு ரூ.78 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.அடுத்த ஆண்டில் மேலும் ரூ.28 ஆயிரம் கோடி வாங்க உள்ளது.எனவே ஐந்தாண்டிலேயே, இதுவரை 65 ஆண்டுகளாக ஆண்ட அரசுகளின் மொத்தக் கடன் தொகையைவிட ரூ.1 லட்சம் கோடியை ஐந்தே ஆண்டில் தற்போதைய தமிழக அரசு வாங்க போகிறது.
தமிழகத்தில் பாஜகவை விட நாங்களே பெரிய கட்சி. ஆகவே திமுக, அதிமுக தவிர எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைப்போம். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜயகாந்தை பார்த்து மக்கள் வாக்களித்தார்கள்.ஆனால் அவர் கூட்டணி வைத்ததால் வாக்கு வங்கி இல்லாமல் போனது” என்றார்.