கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கடுங்குளிர் ஏற்பட்டு வரும் நிலையில் உலகின் முக்கிய சுற்றுலா பகுதியான நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள தண்ணீர் முற்றிலும் உறைந்து பனிக்கட்டியாக மாறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு எல்லையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க உலகெங்கியிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கடுங்குளிர் ஏற்பட்டதோடு மைனஸ் டிகிரியில் தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் பரவியுள்ளது.
இந்நிலையில் நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆக்ரோஷத்துடன் ஓடும் தண்ணீரும் இந்த குளிர்காரணமாக பனிக்கட்டியால் உறைந்து போயுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.