அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டான் கார்டன் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் அவர்களிடம் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் பதவியேற்கு நிகழ்ச்சி பெண்டகனில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆஷ்டான் பதவியேற்றுக்கொண்டிருந்தபோது, துணை அதிபர் ஜோ பிடேன், ஆஷ்டான் மனைவியை நெருங்கி அவரது தோள்களில் இரு கைகளையும் வைத்து அவரது தலைமுடியை முகர்ந்து பார்த்ததாக கூறப்படுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/182LyjB” standard=”http://www.youtube.com/v/LZDOWIxpBgg?fs=1″ vars=”ytid=LZDOWIxpBgg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7370″ /]
இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோவும் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பிடேனின் இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை சமூக வலைத்தள பயனாளிகள் பலரும் விமர்சித்துள்ளனர். “நீங்கள் மீண்டும் உங்களது நடவடிக்கையின் மூலம் முட்டாள் என்று நிரூபித்துவிட்டீர்கள்” என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால் ஸ்டீபனி பதவியேற்பு விழாவுக்கு வரும்போது வழியில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அவருக்கு ஆறுதல் கூறுதல் வகையில்தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் வேறு எந்த தவறான நோக்கமும் துணை அதிபருக்கு இல்லை என்றும் பெண்டகன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.