மேஷம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
ரிஷபம்
உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள்
கடகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள்
சிம்மம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி குணங்கள்
துலாம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள்
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள்
தனுசு
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்-. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுகூர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள்
கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள்
மீனம்
எதிர்காலம் குறித்த பயம், வீண் கவலைகள் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்